Show all

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் மோடிஅரசு ஆர்வம்

 

     நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆராய சட்ட கமிஷனை நடுவண் அரசு கேட்டுகொண்டுள்ளது.

 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடுவண் அரசு, நடுவண் சட்டதுறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் இந்தத் திட்டம் அமல் படுத்தினால் அதன் சாதகங்கள்,பாதகங்களைக் குறித்து சட்ட கமிஷன் ஆய்வு செய்து வருகிறது.

 

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நடுவண் அரசின் விருப்பம் ஆகும். இதை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவோம் என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின், தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

 

இந்த நிலையில் இது குறித்து ஆராயுமாறு மத்திய சட்டக் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளதாக நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா  கூறியிருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமல்படுத்தக்கூடாது என்று நாட்டில் உள்ள சிறுபான்மை அமைப்புகளும் பெரும்பாலான எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.