Show all

பொறுப்பற்ற மருத்துவத் துறையினரால் இந்தியாவில் 2234 எயட்ஸ் நோயாளிகள்

இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கிழமை அசாமில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த 3 அகவை சிறுவன் கவுகாத்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேசத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.