Show all

ஆட்சிக்கு எதிராக தற்கொலை மிரட்டல்! திருந்துவார்களா ஆட்சியாளர்கள்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உயரமான செல்பேசி கோபுரம் உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் ஒரு வாலிபர் அந்த கோபுரத்;தின் உச்சிக்கு ஏறினார்.

அதை பார்த்தவர்கள் யாரோ வேலை பார்ப்பதற்காகத்தான் கோபுரத்தில் ஏறுகிறார் என்று நினைத்தனர். ஆனால் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும் ஊழல், விலைவாசி உயர்வுக்கான 5-ம் ஆண்டு கோபுரப் போராட்டம் என்றும் தனது போராட்டத்திற்கான காரணம் பற்றியும் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களை மேலிருந்து கிழே வீசினார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட கூடாது. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். குடும்ப அட்டைக்கு; ரூ.10 விலையில் சர்க்கரை வழங்கவேண்டும். எழும்பூர் கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், மாணவி அனிதா ஆகியோர் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

செல்போன் கோபுர உச்சிக்கு ஏறிச்சென்று தீயணைப்பு வீரர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கினார்கள். பின்னர் காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,610

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.