Show all

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை: உச்சஅறங்கூற்றுமன்றம்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், அப்பாவி மக்கள் 13 பேர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. 

அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டுத் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை என தெரிவித்து, ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்ததோடு, தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.