Show all

இரஜினி தெரிவித்த செய்தியை வெளியிட்டதாற்காக அன்றே சோ மன்னிப்பு கேட்டிருக்கிறார்! இரஜினிகாந்த்தும் மன்னிப்பே கேட்டேயாக வேண்டும்

அன்றைக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அணியமான துக்ளக் ஆசிரியர் சோ, இராமர் உருவ பொம்மையை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை துக்ளக்கில் வெளியிட்டோம். தன்னிடம் அந்த நிகழ்வு தொடர்பாக எந்த ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்து முடித்துக் கொண்டு விட்டார். ஆனால் இந்த முடிப்பு குறித்து அறியாத இரஜினிகாந்த் தொடக்கத்தை மீண்டும் தூக்கிப் பிடித்து வழக்கில் சிக்கியிருக்கிறார். இவரும் உறுதியாக மன்னிப்பு கேட்பார்!

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, இராமர் மற்றும் சீதையின் உருவபொம்மைகள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார் துக்ளக் ஐம்பதாண்டு விழாவில் இரஜினிகாந்த்.


ரஜினிகாந்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திராவிடர் கழகமும், பெரியார் பெயரிலான பல்வேறு இயக்கங்களும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் மீது காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. 

பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ் புகார் அளித்திருந்தார். 

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் நேருதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

இதேபோல், ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவ பொம்மை வட இந்தியாவில் எரிக்கப்பட்டு வந்தது. அது தமிழர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி அதை கைவிடும்படி திராவிட இயக்கம் நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்தது.

கோரிக்கையை நடுவண் அரசு கண்டு கொள்ளாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமர், சீதை, லட்சுமணர் உருவ பொம்மைகளை எரிக்கும் முயற்சியாக நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணியில் அந்த உருவ பொம்மைகள் கொண்டு வரப்பட்டன. அவை வைக்கோல் நிரப்பப்பட்ட பொம்மைகள் தானே தவிர, அதில் நிர்வாணம் என்று எதுவும் கிடையாது.

இந்த பேரணிக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு சங் பரிவார் அமைப்பினருக்கு சேலம் காவல்துறை அனுமதி வழங்கியது. பேரணி நடக்கும்போது, காவல்துறை அனுமதித்த இடத்தை விட்டு வேறொரு இடத்தில் சங் பரிவார் அமைப்பினர் மறைந்திருந்து பெரியார் மீது செருப்பை வீசியுள்ளனர்.

அது குறிதவறி உருவ பொம்மைகள் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இயக்க உறுப்பினர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து ராமர் உருவ பொம்மையை சில அடிகள் அடித்தார். இவ்வளவு தான் நடந்தது என்கிறார் சோவை குறுக்கு விசரணை மேற்கொண்ட வழக்கறிஞர் துரைசாமி.

இந்த நிகழ்வு பற்றி சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏறத்தாழ இன்றைக்கு இரஜினிகாந்த் சொல்லுவது போல, துக்ளக் செய்தி வெளியிட்டது. 

இந்த நிகழ்வு குறித்து அதே வகையில் தெரிவித்து, சேலம் காவல்துறையில் சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த புகார் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் சங்பரிவார் அமைப்பினர் விடாமல் உயர்அறங்கூற்றுமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது அணியமான துக்ளக் ஆசிரியர் சோ, இராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை நான் துக்ளக்கில் வெளியிட்டோம். தன்னிடம் அந்த சம்பவம் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 

பெரியார் மீது செருப்பை வீசியது தவறு, அதற்காக சங்பரிவார் அமைப்புகள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என்று அறங்கூற்றுமன்றத்தில் கூறியதாக துரைசாமி தெரிவித்துள்ளார். அப்போதே பொய் என்று நிறுவப்பட்ட செய்தியை- அதாவது நிகழ்வுகளின் பிற்பகுதி குறித்து அறியாதவராக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. 

இதே போல சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏறத்தாழ இன்றைக்கு இரஜினிகாந்த் சொல்லுவது போல, துக்ளக் செய்தி வெளியிட்ட செய்தி போலவே செய்தி வெளியிட்ட ஹிந்து இதழும் வழக்கை சந்திந்து மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி வருகிறது. உறுதியாக இரஜினிகாந்த்தும் மன்னிப்பே கேட்டேயாக வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.