Show all

தமிழ் மக்கள் மனம் நெகிழும் வகையிலான சில கேள்விகள்! ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,

1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 

2.அதிலே அதிரடி. 

3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள் இருக்கும்!

இங்கேயொரு வழக்கு: அறங்கூற்றுவர்களின் அதிரடியான கேள்விகள்; தமிழ் மக்கள் மனதில் நெடுங்காலமாக இருக்கிற கேள்விகள். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த மாதம் 9 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பல முறை எச்சரிக்கைவிடுத்தும் போராட்டத்தை திரும்பப் பெறாத இவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப் பெற்றனர். எனினும் வேலைநிறுத்த காலத்தில் ஊதியம் தரப்படமாட்டாது என அரசு அறிவித்துவிட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

1.அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகளை வகுக்க கூடாது. 

2.உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

3.அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை பரிசீலிக்கலாமே. 

4.வேலைநிறுத்த நாட்களை விடுப்பு நாட்களாக கருதி ஊதியம் வழங்கலாமே என்று கேள்விகளை எழுப்பினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.