Show all

பெண்கள் தர்காவுக்குப் செல்வதற்கு தடை நீக்கி உத்தரவு; 6கிழமைகள் நிறுத்தி வைப்பு

மும்பை ஹாஜி அலி தர்காவுக்குப் பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை ஒர்லியில் உள்ள ஹாஜி அலிதர்காவுக்குப் பெண்கள் செல்லத் தடை இருந்து வந்தது. இதனை விலக்கிக்கொண்டு ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் தர்காவுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன், பூ மாதா பிரிகேட் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தடையை நீக்கக் கோரி சாகியா சோமன், நூர்ஜகான் நியாஸ் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கானடே, ரேவதி மொகிதே ஆகியோர், தர்காவுக்குள் பெண்கள் செல்லத் தடை விதித்திருப்பது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும் எனக் குறிப்பிட்டனர். தர்காவுக்குள் பெண்கள் செல்ல இருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஹாஜி அலி தர்க்கா நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்த உத்தரவை, 6கிழமைகள் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.