Show all

சந்தீப் சக்சேனா தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்சக்சேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சந்தீப் சக்சேனாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. மேலும் ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களில் சக்சேனா, ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், சந்தீப் சக்சேனா தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே மத்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இதற்கான உத்தரவு வந்ததாகவும், அது வெளிப்படையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

சக்சேனா பதவிக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் அவர் விடுவிக்கப்பட்டிருப்பதும், அதுவும், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.