Show all

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மணிவிழுந்தான், தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு வயது 23. இவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில்,

நான் மேற்கண்ட முகவரியில் எனது அம்மாவுடன் வசித்து வருகிறேன். எனக்கும், மணிவிழுந்தான் தெற்கு, புது கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும், கடந்த

21-10-2009 அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு என்னை கணவர் துன்புறுத்தினார். அவர் கேட்ட வரதட்சணையைக் கொடுக்காததால் என்னைக் கைவிட்டு விட்டு, நடந்த திருமணத்தை மறைத்து அதே ஊரைச் சேர்ந்த ரேவதி என்ற இளம் பெண்ணை இரண்டவது திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், தலைவாசல் காவல் நிலையத்திலும், சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்தேன். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சேலம் மாவட்ட சமூகநல அதிகாரியிடம் புகார் கொடுத்தேன். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் என் கணவர் என்னுடைய சொத்தை ஏமாற்றி அபகரித்துக் கொண்டார். எனவே நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.

என்னை கடத்தி கொலை செய்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். இரவு நேரத்தில் என்னுடைய வீட்டை சுற்றி வருகிறார்கள்.

என்னை ஏமாற்றி விட்டு இரண்டவது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.