Show all

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டமா? மாநில அரசுக்கு எதிரான போராட்டமா? தெளிவாகப் புரியும் வெளிப்படையான போராட்டங்கள்

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டமா? கேரள மாநில அரசுக்கு எதிரான போராட்டமா?  என்று தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் சபரிமலையில் மாதாந்திர பூசைக்காக நடைதிறக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. அதற்குள் சபரிமலை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் கேரள அரசு இறங்கி உள்ளது. இதற்காக தந்திரி குடும்பத்தினர், பந்தள அரண்மனை பிரதிநிதிகள், ஐயப்பா சேவா சங்க தலைவர்கள் ஆகியோரை நாளை நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைத்துள்ளது.

உச்சஅறங்கூற்று மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற பாஜகவே கண்டன பேரணி அறிவித்துள்ள நிலையில், பாஜக அரசு உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்;பை மதித்தால்;;தான் அதிசயம் இல்லையா? 

அதற்கு முன் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், வன்முறை மற்றும் இருதரப்பு மோதல்களை தவிர்க்கவும் கேரள அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக கேரள அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தந்திரி குடும்பத்தினரும், பந்தள மன்னர் குடும்பத்தினரும் வர மறுத்து விட்டனர். பெண்களை கோயிலில் அனுமதிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டு, வெறும் கண்துடைப்புக்காக கேரள அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இதே போன்று இம்முறையும் நடக்க வேண்டாம் என்பதால் பிரச்னையை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், பழங்கால பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற நாங்கள் நினைக்கவில்லை. சபரிமலை பாரம்பரிய நம்பிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவே விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க தேவசம் போர்டு விரும்பவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் தந்திரி குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த ஆண்டு வரும் பக்தர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என்றார்.

தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், தரிசனத்திற்காக வரும் பெண்களை தடுக்க முடியாது. தேவசம் நிர்வாகிகள் பெண் காவலர் மற்றும் தேவசம் பெண் ஊழியர்கள் சன்னிதானம் முன் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவர் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.