Show all

திமுகவிற்கு சாபம்! உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குள் நுழைக்கப்பட்ட ஹிந்தியை விரட்டியதால்- இயக்குனர் கோ.விஜயராகவன்.

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கி 49 ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது. நடப்பு அரசு ஆங்கே ஹிந்திக்கு பஞ்சப்பிழைப்பு கொடுக்க முயன்று- போராட்டங்களால் பின்வாங்கியிருக்கிறது.

22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்றுக் கொடுப்பது கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த வெற்றியை இணையம் தலைப்பாக்கி கொண்டாடி வருகிறது. அதே சமயம், “மாணவர்கள் கேட்டதால்தான் ஹிந்தி கற்பிக்க முடிவுசெய்தோம். ஆனால், திமுக இதைத் தேவையில்லாமல் சர்ச்சையாக்கிவிட்டது என்று கோபிக்கிறார், உலகத் தமிழ் (ஹிந்தி அல்ல) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ. விஜயராகவன். அத்துடன் 120 மாணவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது" என்று ஹிந்திக்கான பூசாரியாக புலம்பிக் கொண்டிருக்கிறார். 

“தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்கு இடம் கேட்டு சாபம் விடும் யாரப்பா இவரு?”  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ. விஜயராகவனை இணையம் கடுமையாக பகடியாடி வருகிறது.
சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் (ஹிந்திஅல்ல) வளர்ச்சித் துறை அமைச்சர் மபா பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று தொங்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என திமுகவும், தமிழறிஞர் பெருமக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதற்கு மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. மேலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற்சிகள் கைவிடப்படுவதாகத் தமிழ் (ஹிந்திஅல்ல) வளர்ச்சித் துறை அமைச்சர் மபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.