Show all

சுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார்

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அண்மையில் டெல்லி மேலவையில் பா.ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகல் ஆவணம் ஒன்றைக் காண்பித்து பேசினார்.

அந்த ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், முன்னாள் நடுவண் அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்- ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இத்தாலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தங்கள் கட்சி தலைவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை என்று மறுத்தது.

 

இந்த நிலையில், டெல்லி மேலவைத் தலைவர் அமீது அன்சாரியிடம், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தாராம் நாயக் சுப்பிரமணியசாமிக்கு எதிராக உரிமை மீறில் நோட்டீசு ஒன்றை அளித்தார். அதில்

‘சுப்பிரமணியசாமி,

அகமது பட்டேலைக் குறிப்பிட்டு அவர் ஒரு அரசியல் ஆலோசகர் என்று சுட்டிக் காட்டினார்.

அவர் வைத்திருந்தது, அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் அல்ல. மேலவையைத் தவறாக வழி நடத்தும் நோக்கத்துடன் இந்த ஆவணத்தை வேண்டுமென்றே காண்பித்தார்.

இது அவையின் உரிமையை மீறிய செயலாகும். எனவே இந்த நோட்டீசை எடுத்துக் கொள்ளவேண்டும்’

என்று கூறப்பட்டு இருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.