Show all

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்தில், தற்போது, 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உள்ளன.

கனமழை காரணமாக, வேடந்தாங்கல் ஏரி உடையும் அபாய நிலையில் இருந்தது. ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாக போராடி, அதைச் சீரமைத்தனர். தலைமை செயலகத்தில் நேற்று, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அதில், வண்டலூர் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. இப்பின்னணியில், வேடந்தாங்கல் சரணாலயத்தில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.