Show all

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும்: ஜெயலலிதா

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில், இலங்கைக்  கடற்படையினரால் 12 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களது இரு விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும்.

விரைவில் இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும்.

 

இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீண்டும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கையானது துரதிஷ்டவசமானது, இதனைத்  தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

 

தமது பாரம்பரிய கடற்பிரதேசத்தில் மீன்பிடி நடவக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும்.

 

அத்தோடு, தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 73 மீன்பிடி படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த, வெளிவிவகார அமைச்சுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தவேண்டும்.

பிரதமர் மோடிக்கு  அனுப்பிவைத்துள்ள மடலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.