Show all

போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மன உளைச்சல், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை  பிடித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 216 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சட்டங்களை மீறுபவர்களைக் கைது செய்து சிறையில்  அடைப்பது காவல் துறையின் கடைமை.

பொது மக்களுக்குப் பாதுப்பை உறுதி செய்வது காவல்துறையின் நோக்கம்.

ஆனால், பல நேரங்களில் காவல்துறையில்  இருப்பவர்களே இன்னல்களை அனுபவிக்கின்றனர். இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்கி... புழுங்கி... இறுதியில் தற்கொலை  செய்து கொள்கின்றனர். குறிப்பாக பெண் அதிகாரிகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

போலீசார் தற்கொலை செய்து கொள்வது அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும் தமிழகத்தில் அதிகமான போலீசார் மன உளைச்சல் மற்றும் உயர்  அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளராக பணி செய்து வந்த விஷ்ணுபிரியா என்ற இளம் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம்  நிறைந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீசார், போலீஸ் அதிகாரிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது  இடத்தை தமிழ்நாடு தன்வசப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2013ல் 31 போலீசாரும்,

2012ல் 58,

2011ல் 31,

2010ல் 19,

2009ல் 17,

2008ல் 12,

2007ல் 16,

2006ல் 32

என கடந்த 8 வருடங்களில் 216 போலீசார் உயிரை மாய்த்துள்ளனர். இப்படி தொடரும் உயிர் இழப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் கடைசிவரை  தண்டிக்கப்படுவது இல்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.