Show all

ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை.

செப்டம்பர் 11 தாக்குதலைத் திட்டமிட்டுச் செயலாற்றியதன் மூலம் உலகையே அதிர வைத்த முன்னாள் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை எனவும் அமெரிக்காவின் பஹாமாஸில் அவர் தனது குடும்பத்தினருடன் மறைவாக வாழ்ந்து வருகின்றார் என அமெரிக்கப் பாதுகாப்பு இரகசியங்களைக் கசிய விட்டதால் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள என்.எஸ்.ஏ இன் முன்னாள் உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து சுற்றி வளைக்கப் பட்டு சிஐஏ நடத்திய ரெயிடில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்ல பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்த போதும் ஒசாமா பின்லேடனின் சடலத்தை அமெரிக்கா உலகுக்குக் காட்டவில்லை என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பின்லேடன் கொல்லப் பட்டு விட்டதாகப் போலியான ஆவணங்களை அமெரிக்கா காட்டி விட்டதாகவும் இவர் பெரும்பாலும் தாடி இல்லாமல் இராணுவ உடையில் பதுங்கி இருப்பதாகவும் ஸ்னோவ்டென் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒசாமா உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்களையும் அமெரிக்க அரசு அவருக்கு உதவி செய்து வருவதற்கான ஆதாரங்களையும் தொகுத்து ஓர் புத்தகத்தைத் தான் செப்டம்பரில் வெளியிட உள்ளதாகவும் ஸ்னோவ்டென் குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.