Show all

நிகழ்கால தமிழர்கெத்து சல்லிக்கட்டு! உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக, விராலிமலை சல்லிக்கட்டு பிரமாண்டமாக

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்கால தமிழர் கெத்துகள் பட்டியிலிட முடியாத அளவிற்கு பல்லாயிரம் உண்டு. நிகழ்கால தமிழர் கெத்துகள் உயிராக பிரபாகரன், மெய்யாக சுந்தர்பிச்சை, ஆயுதமாக சல்லிக்கட்டு என்பவராக, என்பதாக நின்று தமிழர் நெஞ்சை நிமிரச் செய்கிறது.

சல்லிக்கட்டு கடற்கரையில் தமிழ் இளைஞர்கள் சல்லிக்கட்டை மீட்டுச் சாதித்ததைத் தொடர்ந்து காங்கேயம் காளைகள் புகழ், ஈரோட்டில் முதலாவதாக சல்லிக்கட்டு நடந்து முடிந்தது. 

சல்லிக்கட்டின் பெருமைகள் தமிழகம் எங்கும் ஊர்ஊருக்கு பறைசாற்றப் பட்டு வருகின்றன.

அந்தவகையின்; உச்ச கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடை பெற உள்ள சல்லிக்கட்டை உலக சாதனையாக மாற்றுவதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விராலிமலை அம்மன் குளம் திடலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற உள்ள சல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தனர்.

இங்கு புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 காளைகள் கலந்து கொள்ள உள்ளன. 500 மாடுபிடி வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2 கார்கள், 9 மோட்டார் இருசக்கர வண்டிகள், 700 மதிவண்டிகள்;, தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில்கள், நிலைப்பேழைகள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சல்லிக்கட்டை 20,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இதுதவிர, காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

சல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த சல்லிக்கட்டை கின்னசு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்காக அதற்கான மதிப்பீட்டுக் குழு வருகை தர உள்ளது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.