Show all

சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள்,

ஜனவரி 1 , 2016ம் ஆண்டை மைய நாளாகக்  கொண்டு 2016ம் ஆண்டில் சிறப்பு சுருக்கு முறை திருத்தமாக மேற்கொள்ளப்பட உள்ளது.  இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள்  சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் (வாக்குச்சாவடி மையங்கள்) இன்று முதல்  வெளியிடப்படும் என்று சென்னை மாந்கரட்சி அறிவித்திருந்தது.

 பொது மக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள்  வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்து கொள்ள இதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்  என அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதற்கான ஆவண ஆதார நகலினை சேர்த்தும்  வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது வாக்குச்சாவடி  மையங்களிலோ  இன்று முதல் அடுத்த மாதம் 14 தேதி முடிய உள்ள காலத்திற்குள்  விண்ணப்பிக்கலாம். என்று அறிவித்திருந்தனர்.

மேலும் வரும் 20 மற்றும் அக்டோபர் 4 ஞாயிற்றுகிழமைகளில ஆகிய நாட்களில்  வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும்  அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடாப்படும் என எதிர்பார்த்து பொதுமக்கள் மண்டல அலுவலகங்களுக்கு வந்தனர்.  ஆனால் காலை 10 மணிக்கு அலுவலர்கள் யாரும் வரவில்லை. பொது மக்கள் வரிசையில் காத்திருந்தும் யாரும் பதிலளிக்ககூட ஆளில்லை. இன்று மாநகராட்சி  ரிப்பன் மாளிகையில் புதிய கட்டிடத்தை ஜெயலலிதா திறப்பதால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என  கூறப்படுகிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு மேல்தான் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவோம் என தெரிவிக்கப்பட்டது.

ஆறு மாதமாக அலையும் வாக்காளர்:  சென்னை வள்ளுவர் கோட்டம் மண்டலம் 9 ல் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்பார்த்து வந்த வாக்காளர் ஒருவர் தான்

6 மாதமாக வாக்காளர்  அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தும் இன்று வரை கிடைக்கவில்லை. கேட்டாலும் பதில் சொல்ல மறுக்கின்றனர் என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.