Show all

பரம்பரை மருத்துவத்தின் மீதான சவுக்கடி! நாகை அருகே 9 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகம் சிக்கியதாம்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விசாரணையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவச் சான்றிதழ்களை அந்தப் பல்கலைக்கழகம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி.

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில், அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரில், போலியான பல்கலைக்கழகம் ஒன்றை செல்வராஜ் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். தொலைதூரக் கல்வி வழங்கும் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர், நாடு முழுவதும் ஆயுர்வேத சித்தா ஆகிய மருத்துவத் துறைகளின் கீழ் போலிச் சான்றிதழ்கள் அளித்துள்ளார். இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போலி மருத்துவப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்று முறை மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.  

இது குறித்து நாளேடு ஒன்றில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.  இதையடுத்து, குத்தாலத்தில் ஒரு வீட்டில் இந்தப் போலி பல்கலைக்கழகம் நடத்தி வருவது தெரியவந்தது. சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரக அதிகாரிகள் காவல்துறை கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர் தலைமையில், நாகை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், போலி பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான போலிச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இணையத்தில் ஆங்கிலத்தில் காணப்பட்ட ஒரு கேள்வியும் பதிலும் ஆங்கிலத்திலேயே: 

(?)  I am from bangalore. My query is regarding Registration as Hereditary Medical practitioner of Indian Medicine. My family is practicing Indian medicine as a hereditary practitioner. My great grandfather was a siddha practitioner with registered certifications from tamilnadu board of Indian medicine.And following grandfather and my father also practiced Siddha medicine with registered certificates from tamilnadu board of Indian medicine.
I am practicing the same since 16yrs along with my father. Recently my father expired and now I am continuing the same practice.
I request team of lawyers to help me in registering my self as registered practioner, as my aim is to serve the society with healing medicine continued since 100yrs and above.

(!)  Legally, u cannot practice. The practitioner should have a B.S.M.S / B.I.M degree recognized by Central Council of Indian Medicine (CCIM), New Delhi, to practice Sidha in India. The medicines are not considered over-the-counter medicines in India. At the same time they are not strictly regulated either.
There are thousands of people who use Sidha traditionally in their circles without any proper qualification. And so far no law agency has scorn over it. Still, if any one wishes to establish legal proper practice, must have a qualification and registration.
Now-a-days, RMPs in allopathy are not given licence to practice, but number of such practitioners survive more so in remote villages and tribal areas. In the absence of availability of adequate qualified practitioners, the Government is unable to legally ban or initiate any action on such clinics.

உலகத்திலேயே அதிகமக்கள் அதிக ஈடுபாட்டுடன் அறிந்து வைத்திருக்கிற துறை எது? என்று தம் அமைச்சர்களிடம் கேட்டிருக்கிறார் ஒரு அரசன்.

நீண்ட ஆய்வுக்குப் பிறகு மருத்துவத் துறைதான் என்று அவர்கள் முடிவு செய்தார்களாம். உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தன்னை மேதாவியாக பதிவு செய்து கொள்ள ஒவ்வொருவரும் கொஞ்சம் மருத்துவக் குறிப்புகளை கைவசம் வைத்துள்ளார்கள். என்பதே அதற்கான காரணம்.

அல்லோபதி மருத்துவம் கொடி கட்டிப் பறந்தாலும், தொன்னூறு விழுக்காடு மக்களுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. 

இந்த தொன்னூறு விழுக்காடு மக்களுக்கு பக்கவிளைவு இல்லாத மருத்துவம் அளித்து வருவது ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கிற கொஞ்சம் கொஞ்சம் மருத்துவக் குறிப்புகள்தாம். அந்த மருத்துவக் குறிப்புகளை அரசு அங்கீகாரத்தோடு செயல் படுத்த ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசால் ஆர்ஐஎம்பி, ஆர்எச்எம்பி, எஸ்எம்பி போன்ற சான்றிதழ்கள் வழங்கப் பட்டு வந்தன. 

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவங்களுக்கு பட்டப் படிப்பு தொடங்கப் பட்டு விட்ட நிலையில், பரம்பரையாக மருத்துவம் பார்த்து வந்த குடும்பத்தினர்களுக்கு அந்த வாய்ப்பு முற்றாக மறுக்கப் பட்டு விட்டது. மஞ்சள்காமலை, எலும்பு முறிவுகளுக்கு பலர் ஊரறிந்த பிரபல மருத்துக் குறிப்பாளர்களாக சிறப்புமருத்துவம் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். ஆனால் பொதுமருத்துவத்தில் ஈடுபடுபவர்கள் இப்படி ஏதாவது ஒரு பட்டம், சான்றிதழுக்கு இப்படி சில நிறுவனங்களை நாடுகிறார்கள். 

அந்த நிறுவனங்களும் பட்டங்களும், சான்றிதழும் கொடுத்த போதும் பாதுகாப்பாக மருத்துவக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள் என்ற எச்சரிக்கத்தான் செய்கின்றன. 

இப்படி அவ்வப்போது ஒவ்வொரு நிறுவனங்கள் போலி நிறுவனங்களாக அறிவிக்கப்பட பிரபல ஊடகங்கள் எந்த ஆய்வும் இல்லாமல் அப்படியே செய்திகளை அவ்வப்போது வெளியிட்ட முடித்துக் கொள்கின்றன.

பரம்பரை மருத்துவ ஆர்வம் முற்றாக முடிவுக்கு வரும் வரை, அல்லது பரம்பரை மருத்துவ ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்பு போலவே அரசே சில சான்றிதழ்களை வழங்கி அங்கீகரிக்க முயலாத வரை, போலி மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள். போலி மருத்துவ நிறுவனங்கள், போலி மருத்துவர்கள் தோன்றி தோன்றி அழிக்கப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள். 

தமிழர் தொழில் அடிப்படையாக வந்ததுதாம் சாதி. அதை பிறப்படிப்படையாக மாற்றி தொடர்ந்து அடிமைப் படுத்துவதற்கு சாக்கடை சுகாதாரம், ஆடை சுகாதாரம், முடி சுகாதாரம், என்பன சாதியத் தொழில்களாக அங்கீகரிக்கப் பட்டு தலித் இனங்கள் இருக்கலாம் என்கிற போது, மருத்துவம் மட்டும் சாதியத் தொழிலாக அங்கீகரிக்கப் படாமல் பிடுங்கப் படும் அரசியலை மாற்ற அது சாதியாக அங்கீகரிக்கப் படவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.