Show all

மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பேச்சில் பொள்ளாச்சி தீ! தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களை விசாரிப்போம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டமன்ற துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என்று  மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி தெரிவித்துள்ளார். 

கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக கூறினார். தேவையில்லாத காணொளிகளை ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைகளை தெரிவித்தால் அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆணையத்துக்கு யாரை வேண்டுமானலும் விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும், தேவைப்பட்டால் துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என்றும் கூறினார். மகளிர் ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி எண் மூலமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்கலாம் எனவும் தெரிவித்தார். 

சமூக அக்கரை சார்ந்த கொள்கை இருந்தால், சமூக அச்சம் இருக்கும். செயலலிதா மறைவிற்கு பின்பான அதிமுகவிற்கு எட்டப்பனியம் தானே கொள்கையாகிப் போனது. ஆட்சியில் இருக்கிற அதிமுகவினர் எந்த தப்பையும் தெரிந்தே செய்வார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு மட்டுந்தாம் இருக்கிறது என்று நினைத்திருந்த நிலையில்,  மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி அவர்களின் போச்சு, குற்றம் செய்திருந்தால் அதிமுகவினர்கள் மதுரை தீ போல பொள்ளாச்சி தீ பற்றி எரிக்கத் தயங்காது என்ற நம்பிக்கையை பொது மக்களுக்கு ஊட்டுவதாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.