Show all

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறினார்.

தமிழகத்தில் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. டெல்லியிலும் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தை சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று 4 மண்டலங்களாக பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் 8 மாவட்டங்கள் வருகின்றன.

இதில் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி., சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கலெக்டர்கள், டி.ஆர்.ஓ. ஆகியோருடன் 12-ந் தேதி (இன்று) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இது போன்ற கூட்டம் மதுரை மண்டலத்தில் 19-ந் தேதியன்றும், திருச்சி மண்டலத்தில் 20-ந் தேதியன்றும், சென்னை மண்டலத்தில் 28-ந் தேதியன்றும் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை ஏற்று நடத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.