Show all

புது உத்தரவு தேவையில்லை என வழக்கு முடிப்பு! வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்க வேண்டி தொடுக்கப் பட்ட வழக்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் உண்மை உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

உரிமம் வைத்திருக்காத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினருக்கு கடினமாக உள்ளது என்றும், 3 முறை ஒரே மாதிரியான விதிமுறைகளை மீறுவோர் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடியும் என்ற போதிலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காத காரணத்தால் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று அந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுமையுந்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அணியமான வழக்கறிஞர், வாகன ஓட்டுநர் உரிமம், அல்லது, எண்ணிம வாகன ஓட்டுனர் உரிமத்தை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்பது, நடுவண் அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் கோரிக்கையை, நடுவண் அரசு உத்தரவு உறுதி செய்துள்ளது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வழக்கை முடித்து வைத்தனர் அறங்கூற்றுவர்கள்.

நடுவண் அரசின் அறிவுறுத்தல் ஏற்கனவே அமலில் உள்ள காரணத்தினால் அறங்கூற்றுமன்றம் மீண்டும் அது தொடர்பாக உத்தரவிடவில்லை.

ஆக வாகன ஓட்டிகள், அசல் உரிமம் அல்லது எண்ணிம வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,993.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.