Show all

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: பாரதிய ஜனதா படுதோல்வி, காங்கிரஸ் சிறப்பான ஆரம்பம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நேற்று நடைபெட்றது. இவற்றில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியும், மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியையும் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியையும் நட்பெற்று வந்தது. 

தற்போது, தேர்தலுக்கு பின்னர் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் மற்றும் சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றதால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நடைபெற்று வருகிறது. எனினும் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதால், யாரேனும் ஒரு சுயேட்சையின் ஆதரவை பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் நாடாளுமற்ற தேர்தல் நடைபெறுவதால், இந்த முடிவு பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.