Show all

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மக்கள் பதிலடி!

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.

தற்போது உள்வரும் அழைப்புகளுக்கும் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்து வேலையைத் தொடங்கி விட்டன தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இனி காலாவதி நாள் முடிந்ததும் செல்பேசி செத்துப் போகும். யாருக்கும் பேசவும் முடியாது. யார் அழைத்தாலும் அழைப்பு மணியும் அடிக்காது. 

நிறைய செல்பேசி வாடிக்கையாளர்கள் இரண்டுக்கு மேற்பட்ட செறிவட்டையை பயன் படுத்தி வருகிறார்கள். ஒன்றை முதன்மையாக வைத்துக் கொண்டு இரண்டவதில் காசு போடாமல் உள்வரும் அழைப்புகளுக்கு மட்டும் பயன் படுத்தி வருவார்கள். 

தற்;போது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உள்வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலிக்கும் அதிரடியால், ஒற்றை செறிவட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையேற்படும் போது பத்து ரூபாய்க்கு கட்டணஏற்றம் செய்து பேசிக் கொண்டிருக்கும் கிராம மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இனி செல்பேசியை காலாவதியாகமல் பார்த்து கொண்டாக வேண்டுமே யென்று. 

ஆனால் இரண்டாவது செறிவட்டையும் பயன் படுத்தும் நகரவாசிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்.

தனக்குப் பிடித்த ஒரு நிறுவனத்தின் செறிவட்;டையை மட்டும் வைத்துக் கொண்டு இன்னொரு செறிவட்டையை உடைத்து, தலையை மூன்று சுற்று சுற்றி தூக்கி எறிவதுதான் அந்தப் பதிலடி.

இனி இரட்டை செறிவட்டை பயன் படுத்தும் வசதியுள்ள செல்பேசித் தேவையும் குறைந்து போகும். ஒற்றை செறிவட்டை பயன்படுத்தும் வசதி மட்டுமேயுள்ள செல்பேசியை தேடத் தொடங்குவார்கள் மக்கள். ஆக மொத்தம் மக்களுக்கு ஒரு கண் போனாலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டு கண்ணும் போகப் போகிற வரத்தை மக்கள் பயன் படுத்தப் போகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.