Show all

பாராளுமன்றத்தேர்தல் தினகரன் அமமுக தனித்துப் போட்டி! பத்திலிருந்து பதினைந்து தொகுதிகள் மட்டும்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற தினகரன் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் களஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த களஆய்வில் 10 தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகவும், 5 தொகுதிகள் 2-ம் இடத்தை பெறும் தொகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

பெரும்பாலும் கழிமுக மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அந்தக் களஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி, சேலம், திருப்பூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகியன அந்தப் பத்து தொகுதிகள்.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை அ.ம.மு.க. பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே அந்த பத்து பதினைந்து தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.