Show all

பரிசுப் பணத்தால் கொலை!

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமங்களில் புழங்கி வரும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை: ஒரு ஊரில் ஒரு திருடர் குழு இருந்ததாம். அவர்கள், அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் எல்லையில் இரவு நேரங்களில் காத்திருத்து பயணிகளிடம் வழிப்பறி செய்வார்களாம். கிடைத்த தொகையை அந்தக் குழுவிலிருந்த நான்கு பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்களாம். இந்த நிலையில் கடந்த ஒரு கிழமை காலமாகவே ஒரு வழிப்பறிக்கும் வாய்ப்பில்லாத நிலையில், அன்றும் வழிப்பறிக்காக விடியற்காலை வரை காத்திருந்து விட்டு இன்றைக்கு எப்படியும் தலைக்கு ஒரு நூறு ரூபாய் என குறைந்தது ஒரு நாநூறு அளவுக்காவது கொள்ளை அடித்தாக வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்து, பக்கத்து ஊரில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு வீட்டை கொள்ளையடிக்க தேர்வு செய்தார்கள். 

அந்த நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைந்த போது அந்த வீட்டில் கணவன் மனைவி இரு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். திருடர்கள் இருட்டில் தவறிப்;போய் அந்தக் குடும்பத் தலைவரின் காலைத் தட்டி விட, அவர் விழத்துக் கொண்டு திருடர்களை எதிர்த்து போராடத் தொடங்கினார். திருடர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து தாக்கினார். திருடர்களும் இருவரிடம் குடும்பத் தலைவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது மற்ற இருவர் ஏதாவது பணம், காசு நகை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக திருடர்கள் கையில் ஒரு உண்டியல் கிடைத்திருக்கிறது. அது வரை திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த குடும்பத் தலைவர் போராடுவதை விட்டு விட்டு அந்த உண்டியலை திருடர்களிடம் இருந்து மீட்க கெஞ்சத் தொடங்கி விட்டார். 

திருடர் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம்! அப்படியானால் இந்த வீட்டில் இருப்பாக அல்லது சேமிப்;பாக இருப்பது இந்த உண்டியல் மட்டுந்தானா என்று அந்தக் குடும்பத் தலைவரிடம் கேட்டே விட்டான். ஆம் இந்தத் தொகை மட்டுந்தான் எங்கள் சொத்து இருப்பு எல்லாம் அதுவும் பல மாதங்களாக ஒவ்வொரு காசாக சேமித்தது என்றாராம். 

நமது ஊர்களில் மக்கள் இவ்வளவு வறுமையில் இருக்கிறார்களா? இவர்களிடமா நாம் இத்தனை நாளாய் பொறுப்பில்லாமல் திருடிக் கொண்டிருந்தோம் என்று திருடர் தலைவன் மிகவும் வருந்தினானாம். அன்றிலிருந்து திருடர்தலைவனும் அவர் குழுவினரும் திருடுவதை அடியோடு விட்டு விட்டு உழைக்கத் தயாராகி விட்டார்களாம்.

இன்றைக்கும் நமது மக்கள் பலரிடம் இவ்வாறான வறுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தும் வகையாக, ஆயிரம் ரூபாயில் ஐநூறு ரூபாய்க்காக ஒரு கொலையே நடந்திருக்கிறது. அந்தத் தொகை ஆயிரமும் நமது தமிழக அரசு மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடட்டும் என்று வழக்குகளை எல்லாம் சந்தித்து, வழங்கிய தொகை. உசிலம்பட்டி அருகே ஏழுமலை பகுதியை சேர்ந்த இணையர் ராமர்-ராசாத்தி. இப்போது ராமருக்கு அகவை 75, ராசாத்திக்கு 65 ஆகிவிட்டது. இந்த நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயை நியாயவிலை கடைக்கு போய் ராசாத்தி வாங்கி வந்துவிட்டார். ஆனால் அந்த ரூபாயில் எனக்கு பாதி பணத்தை பிரித்து தா என்று ராசாத்தியிடம் ராமர் நேற்று சண்டைக்கு போய் இருக்கிறார். இந்த விசயத்தை திரும்பவும் இன்னைக்கு காலையில் தொடங்;கினார் ராமர். பொங்கல் செலவுக்கு அரசு கொடுத்த தொகை. இவ்வளவு பெரிய தொகையை வீணடிக்க வேண்டாம். துணிமணிகள் வாங்கி இந்த ஆண்டு பொங்கலைச் சிறப்பாக கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளார் ராசாத்தி.  

எனது பங்கான தொகையை எனது விரும்பம் போல் செலவு செய்வேன் மரியாதையாக கொடுத்து விடு என்று மிரட்டியிருக்கிறார் ரமார். கொஞ்சம் கூடா ராசாத்தி மசியாத நிலையில் ராமருக்கு ஆத்திரம் வந்து, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ராசாத்தியை வெட்டி விட்டார். இதில் ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்கலங்கிய ராமர் தன் கண்முன்னாடியே ராசாத்தி துடிதுடித்து இறந்ததை பார்த்ததும், ராமர் நிலைகுலைந்து நின்றார். இப்படி அரிவாளால் வெட்டி விட்டோமே என்று அதிர்ச்சி அடைந்த ராமர், கண்கலங்கி போய்விட்டார். அதனால் நேராக காவல்நிலையம் போய் சரண்அடைந்து விட்டார். 

இலவசங்களை மறுக்கிற நிலையில் தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் இல்லை. இலவசங்கள் மட்டும் அல்ல தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அரசுக்கு நிறைய இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.