Show all

'மோடி குர்தா”

விழாக்;களுக்கு ஏற்ற வகையில் உடைகள் அணிவதில் பிரதமர; மோடி வல்லவர். அவர் அணியும் அரை குர்தா மக்களிடையே பெரும் பிரபலம், அந்த குர்த்தாவை 'மோடி குர்தா” என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு உடைகள் அணிவதில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடி,  தான் அணியும் உடைகளை வடிவமைப்பதற்காக பிரத்யேக பேஷன் டிசைனர்களைப் பணிக்கு வைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தனது உடை ரகசியத்தை பிரதமர் மோடி இன்று தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ, மாணவியர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது உடை குறித்தும் மாணவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறுகையில், நான் அணியும் உடைகளை தயாரிப்பதற்கென்றே ‘பேஷன் டிசைனர்கள்’  பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஒரு பரவலான கருத்து இருந்து வருகின்றது. எனக்கென்று எந்த பேஷன் டிசைனரையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. நான் அணியும் அரைக்கைச் சட்டைகளை நானே வடிவமைத்தேன். இதற்கு கைதேர்ந்த பேஷன் டிசைனர் தேவையில்லை.

எனது சிறுவயதில் என் துணிகளை நானே துவைத்துக் கொள்வேன். முழுக்கைச் சட்டைகளை துவைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். அதுமட்டுமின்றி, எனது பைக்குள் அவற்றை வைக்க போதுமான இடமும் இருக்காது. மேலும், குஜராத்தில் எப்போதுமே குளிர்காலமாக இருப்பதில்லை. அதிக மாதங்கள் வெயில் காலம்தான்.

எனவே, ஒருநாள் என்னிடம் இருந்த முழுக்கைச் சட்டைகளின் கைப்பகுதியை எல்லாம் வெட்டி, அரைக்கைச் சட்டையாக்க முடிவு செய்தேன். இப்படிதான், அரைக்கைச் சட்டை அணியும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

அப்போதெல்லாம் சட்டைகளை ‘இஸ்திரி’ போடக்கூட என்னிடம் பணவசதி இல்லை. ஒரு பானையில் அடுப்புக்கரி நெருப்பை போட்டு அதன் மூலம் என் சட்டைகளை தேய்த்து, அணிந்து கொள்வேன். மாணவர்களாகிய நீங்களும் சுத்தமாக இருக்கவும், சூழ்நிலைக்கும், விசேஷங்களுக்கும் ஏற்றவகையில் உடைகளை தேர்வுசெய்து அணிவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.