Show all

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழரை உடனே கண்டுபிடிக்க

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழரை உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

     பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டு இருப்பது தொடர்பான நிகழ்வை மிக அவசரமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

     பெற்றோருக்கு அவர்தான் மூத்த மகன். ராகவேந்திரன் கணேசனின் இளம் மனைவி, முதல் குழந்தையை பெற்றெடுத்த பிறகு தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் அனைவருமே ராகவேந்திரன் கணேசன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவலையும் அவரது பாதுகாப்பு பற்றியும் கேட்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

மகனை கண்டறிவதற்காக ராகவேந்திரன் கணேசனின் பெற்றோர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இவர்களுக்கு உதவும் வகையில், ராகவேந்திரன் கணேசனை விரைவில் தேடிக் கண்டுபிடிப்பதற்கு, பிரசல்சில் உள்ள இந்திய தூதகரத்துக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும் நீங்கள் உத்தரவிட வேண்டும்.

வேதனையோடு காத்திருக்கும் அந்த குடும்பத்தாருக்கு உங்களின் உதவி மிகுந்த ஆறுதலை அளிக்கும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.