Show all

பொதுமக்களின் ஆறுதல்! பன்னீரை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் வாய்ப்பு கிடைக்க வில்லையே என்று புலம்பும் 10 பாஉ க்களுக்கு

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 'தர்மயுத்தம்' நடத்திய அவரது ஆதரவு பாராளுமன்றஉறுப்பினர்கள் 10 பேரில் ஒருவருக்குக்கூட மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயலலிதா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முயற்சியாக முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலகி சசிகலா முதல்வராக வழிவிடக் கேட்ட போது, முதல்வர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும் கூட சசிகலாவுக்கு எதிராக 'தர்மயுத்தம்' தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். அப்போது அவருக்கு பக்கபலமாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் நின்றனர்.

ஒருவழியாக சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு, சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட கே.பழனிசாமி, பிறகு பன்னீரை அழைத்துக் கொள்ளும் வகையாக பாஜகவால் காய்நகர்த்தப் பட்டது. பன்னீர் துணை முதல்வர் ஆனார். அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

எடப்பாடி-பன்னீர் இருவரும் ஒரே அணியாக நின்று சசிகலாவையும், தினகரனையும் ஓரங்கட்டினர். கட்சியின் பெயர் மற்றும் 'இரட்டை இலை' சின்னத்தை எடப்பாடி-பன்னீர் அணிக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. கட்சி ஒருங்கிணைப்பாளராக பன்னீர் துணை ஒருங்கிணைப் பாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றனர்.

கட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் பன்னீர் இத்தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு கணிசமான இடங்களை வாங்கிக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், அவரது ஆதரவு பாராளுமன்றஉறுப்பினர்கள் 10 பேரில் ஒருவருக்குகூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, பன்னீர் உட்பட பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் 37 பாராளுமன்றஉறுப்பினர்களில் 27 பேர் எடப்பாடி அணியினர்; 10 பேர் பன்னீர் அணியினர். இதில், எடப்பாடி அணியை சேர்ந்த தம்பிதுரை (கரூர்) மருத்துவர் வேணுகோபால் (திருவள்ளூர்), மருத்துவர் ஜெயவர்தன் (தென் சென்னை), மரகதம் குமரேவல் (காஞ்சிபுரம்), மகேந்திரன் (பொள்ளாச்சி), செஞ்சி சேவல் ஏழுமலை (ஆரணி) ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பன்னீர் அணியைச் சேர்ந்த சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா (திருப்பூர்), வனரோஜா (திரு வண்ணாமலை), கோபாலகிருஷ்ணன் (மதுரை), செங்குட்டுவன் (வேலூர்), மருத ராஜா (பெரம்பலூர்), ஜெயசிங் தியாக ராஜ நட்டர்ஜி (தூத்துக்குடி), பார்த்திபன் (தேனி) உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத் தில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. அதுவும் வழங்கப்பட வில்லை.

ஏற்கெனவே, தனது தம்பிக்கு ஆவின் தலைவர் பதவி வாங்கித் தந்த பன்னீர், தற்போது அவரது மகனுக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று, ஆதரவாளர்களை கைவிட்டு விட்டார். இவ்வாறு அவர்கள் பன்னீர் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப் படுகிறது.

வைப்புத் தொகையை எல்லா தொகுதிகளிலும் இழக்கப் போகிற அதிமுகவில் வாய்ப்பு கிடைக்க விட்டால் இலாபம் தானே அந்தப் பத்து பேர்களுக்கும் என்று  பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்து பதிவிடப் பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.