Show all

நீட்டை ஒழித்தே தீருவோம்- குனிந்தது போதும் நிமிர்தெழுவோம்! அதிமுக அரசு ‘நீட்’க்கு எதிராக இரண்டு வழக்குகள்

தமிழக மாணவர்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தமிழகக் கல்வி, தொழில் நுட்பம் சார்ந்து கல்வி அளித்துவிட்டு, திடீரென்று அவர்களை பாஜக விரும்பும் கார்ப்பரேட் தொழில்நுட்பத்திற்கு பழக்குவது சாத்தியமில்லாதது என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில் பாஜக அரசு வளைக்கும் வளைப்புகெல்லாம் சென்றால், தமிழகத்தில் தாங்கள் காணாமல் போய் விடுவோம் என்று உள்ளாட்சித் தேர்தலில் நன்றாக உணர்ந்தும் கொண்டது அதிமுக. இனி நீட் வேண்டாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறது அதிமுக அரசு.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நமது தரத்தை உயர்த்துவதற்கானதல்ல நடுவண் பாஜக அரசின் நீட். நம்மை வீழ்த்துவதற்கானதே நடுவண் பாஜக அரசின் நீட், என்பதை புரிந்து கொண்டுள்ளது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக அரசு.

இந்திய மருத்துவக் கழகம் மற்றும் பல் மருத்துவ கழகத்தின் சார்பில் நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதையும் நீட் தேர்வையும் எதிர்த்து இரண்டு கிழமைகளுக்கு முன் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது. 

தற்போது நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பதால் அரசின் சார்பில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டால் அது கொள்கை முரண்பாடாக இருக்கும் என பள்ளி கல்வித்துறைக்கு சட்ட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர பனிரெண்டாம் வகுப்பு முடித்திருப்பது தகுதியாகும். அப்படி பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அந்த பனிரெண்டு ஆண்டுகள் படித்த படிப்பைப் பற்றி கவலையில்லை. நடுவண் பாஜக அரசு நடத்தும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதனால் அவர்களால், பனிரெண்டு ஆண்டுகள் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத நடுவண் அரசின் பாடத்திட்டத்தின் தரவரிசை பட்டியலில் முன்னிலைக்கு வந்து மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

இந்நிலையை போக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தனியார் மையங்கள் வாயிலாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் உரிய பலன் தரவில்லை.

தமிழக மாணவர்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தமிழகக் கல்வி, தொழில் நுட்பம் சார்ந்து கல்வி அளித்துவிட்டு, திடீரென்று அவர்களை பாஜக விரும்பும் கார்ப்பரேட் தொழில்நுட்பத்திற்கு பழக்குவது சாத்தியமில்லாதது என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில் பாஜக அரசு வளைக்கும் வளைப்புகெல்லாம் சென்றால், தமிழகத்தில் தாங்கள் காணாமல் போய் விடுவோம் என்று உள்ளாட்சித் தேர்தலில் நன்றாக உணர்ந்து கொண்டது அதிமுக. 

இதையடுத்து நீட்டுக்குப் பயிற்சி நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, நீட்டை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது அதிமுக அரசு. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.