Show all

உலகின் மிக வயதான கின்னஸ் பாட்டி காலமானார்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகவும் வயதான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சூசன்னா (வயது 116) உடல் நலக்குறைவால் காலமானார்.

 

அமெரிக்காவில் உள்ள அலாபமா மாநிலத்தை சேர்ந்தவர் சூசன்னா முஷாத் ஜோன்ஸ் இவர் 1899-ம் ஆண்டு பிறந்தார். 1922-ம் ஆண்டில் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்கில் குடியேறிய சூசன்னா குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 1965-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

நியூயார்க் நகரில் தனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்த சூசன்னா சமீப காலமாக முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். இந்தத் தகவலை சூசன்னாவின் குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்தனர்.

 

தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாததும்,  நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் எனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

 

சூசன்னாவை, உலகின் மிகவயதான பாட்டி என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்திருந்தது.

 

சூசன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரனோ மார்ட்டினுஸி(116) என்பவர் தற்போது உலகின் மிகவயதான பாட்டி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.