Show all

நியூஸ் ஜெ நாளை தொடக்கம்! எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதா மறைவுக்கு முன்பு வரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சியும், அதிமுக நாளேடாக நமது எம்ஜிஆர் இதழும் இருந்தன.

செயலலிதாவின் நம்பகமான நபராகவும், உயிர்த் தோழியாகவும் இருந்த சசிகலாவே செயலலிதாவிற்கான நேரடி உதவியாளராக இருந்து வந்தார். சசிகலா சொந்த பந்தங்களில் தனக்கு நம்பகமானவர்களை தெரிவு செய்து கட்சிப் பணிகளை ஒப்படைத்திருந்தார். செயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் அடையாளத்தை மாற்றும் முயற்சியில் களம் இறங்கியது நடுவண் பாஜக அரசு ; அதற்கு முதலில் துணை போனவர் ஓ.பன்னீர் செல்வம்.

செயலலிதா மீது திமுக போட்ட சொத்துக் குவிப்பு வழக்கை சாதகமாக்கிக் கொண்டு சசிகலாவை சிறையில் அடைத்தனர். சசிகலாவால் நம்பகமானவர் என்று ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட எடப்பாடி பழனிச்சாமியை வளைத்து, பன்னீர் செல்வத்திற்கு ஆட்சியில் பொறுப்பு வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக ஆளவைத்துக் கொண்டிருக்கிறது நடுவண் பாஜக அரசு.

ஆட்சியை எடப்பாடியும் பன்னீரும் அனுபவித்துக் கொண்டிருந்தாலும். தமிழ் மக்கள் அவர்களை அதிமுகவாக அங்கிகரிப்பார்களா என்பதை அடுத்த தேர்தலில் தாம் தெரியும்.

தமிழ்மக்களிடம் தங்களை அதிமுகவாக காட்டிக் கொள்வதற்காக, செயலலிதா பிறந்த நாளையொட்டி, எடப்பாடி, பன்னீர் அணியால் நமது அம்மா இதழ் தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் சிலரின் உறவினர்கள் இந்த இதழை நிர்வகித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி, பன்னீர் அணிக்கான அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக 'நியூஸ் ஜெ' தொடங்கப்படுகிறது. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதா கிருஷ்ணன் இதன் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

'நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் இலட்சினை மற்றும் இணையதளம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இதை அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது விரைவில் 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.