Show all

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி! என்னதான் நடக்கிறது என்று, ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் தமிழகம்

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து எதிர்ப்புகளுக் கிடையேயே தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

தொடர்ந்து பதட்டம் நீடித்த நிலையில், மக்களை தற்காலிகமாக அமைதிப் படுத்த, தற்காலிகமான ஒரு அரசாணையை, சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சிகள், இந்த அரசாணை பயன் தராது என்று தெளிவு படுத்தியும், ஏதோ உள்நோக்கத்;;தோடு பிடிவாதமாக எடப்பாடி அரசு வெளியிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. 

இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை அறங்கூற்றுவர் தருண் அகர்வால் தலைமையிலான, உண்மை கண்டறியும் குழு என்ற, பெயருக்கு பெயரிலான குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.

இந்த நிலையில்,  துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

என்னதான் நடக்கிறது தமிழகத்தில் என்று, மக்கள் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல், நொந்து போயிருக்கிறார்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.