Show all

போயிங்கிடம் இருந்து இந்தியா 250கோடி டாலரில் ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு.

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு  7நாள் பயணமாக செல்கிறார். அவர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில் அமெரிக்காவின் பெரும்விமான நிறுவன தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடம் இருந்து இந்தியா 250கோடி டாலரில் ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்து இருக்கிறது.பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கமிட்டி இதற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச் ஹெலிகாப்டர்களையும் 15 சின்னுக் ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்குகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் அதிநவீன தொழில் நுட்பம் கொண்டது ஆகும். இந்த ஹெலிகாப்டர்கள் இரவு நேரத்திலும் இலக்குகளை குறி தவறாமல் தாக்கக்கூடியதாகும்.

அபாச் மற்று சின்னுக் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்த விவரம் முடிவாகி விட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2013ம்ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பான முடிவு நிலுவையில் இருந்தது. அபாச் ஹெலிகாப்டர்கள் விலை கூடுதலாக இருப்பதாக கருதப்பட்டதால் அதனை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தியாவின் ராணுவ சந்தையில் தங்களது நாட்டு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

கடந்த 10ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் ஆயிரம் கோடி டாலர் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது. கடல்சார் கண்காணிப்பு விமானங்கள்,

சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் சி-17 போன்ற போர் விமானங்களை அமெரிக்க நிறுவனம் இந்தியாவிடம் விற்பனை செய்துள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.