Show all

2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மதுரையில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியாக பா.ம.க. உள்ளது எனவும், தங்கள் தலைமையை ஏற்று யார் வந்தாலும் குறிப்பாக அன்புமணி முதலமைச்சர் என்ற நிபந்தனையை ஏற்று யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என ராமதாஸ் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பாமக எங்கள் கூட்டணிக்கு வரும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது நடக்காத ஒன்றாகும் என தெரிவித்த ராமதாஸ் 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் என்றார்.

மேலும் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள், அதனை பாமக கண்டிப்பாக நிறைவேற்றும். பிறந்த குழந்தை முதல் அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தரமான கல்வியை பாமக வழங்கும். ஜனாதிபதிக்கு கிடைக்கும்  மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவோம் என வாக்குறுதிகளை அளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.