Show all

தொடர் வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

தொடர் வண்டி பயணச்சீட்டு; முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், ஒரு தொடர் வண்டியில் அதிகபட்சமாக 90 இருக்கைகள் வரை அவர்களால் பெற முடியும்.

 இதுதொடர்பாக, ரயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:

தொடர் வண்டிகளில் மூத்த குடிமக்களுக்களுக்கான முன்பதிவு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. அதையடுத்து, அவர்களின் முன்பதிவு இடஒதுக்கீட்டை 50விழுக்காடாக உயர்த்தி ரயில்வே வரவுசெலவுத்;திட்டத்ததில் நடுவண் அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

 அந்த அறிவிப்பானது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 இதனால், ஒரு ரயிலில் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 80 முதல் 90 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளைப் பெற முடியும்.

 இதுதவிர, 45 வயதைக் கடந்த பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முன்பதிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.