Show all

இந்தியாவின் பகைவன் மோடி! உதயநிதி ஸ்டாலின் வர்ணிப்பு

சேலம் உடையாப்பட்டியிலும், வாழப்பாடியிலும் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணிக்கு ஆதரவாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் இந்தியத் தலைமை அமைச்சர் மோடியை இந்தியாவின் பகைவன் என்று வர்ணித்தார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணிக்கு ஆதரவாக சேலம் உடையாப்பட்டியிலும், வாழப்பாடியிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

தமிழகத்துக்கு கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது ஒருமுறை கூட வராத மோடி, தற்போது வாக்குகளுக்காக தமிழகத்துக்கு 4 முறை வந்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்தியாவின் கதைத்தலைவன். அதைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். கதைத்தலைவன் என்று ஒருவர் இருந்தால் பகைவன் என்று ஒருவர் இருப்பார் இல்லையா? இந்தியாவின் பகைவன் மோடிதான்.

இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் சாதனை வெளிநாட்டு பயணம் மட்டும் தான் இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.