Show all

சரக்கு-சேவைவரி போன்ற வரிவிதிப்பினால் பெட்டிச் சாவி மோடி வசம்தான் உள்ளது! அவர்கள்தாம் கஜா நிவாரணம் தரவேண்டும்: தம்பிதுரை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசிடம் நிதி கேட்க முடியாத நிலையை அரசியல் கட்சிகள் உருவாக்க கூடாது. கஜா புயலை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம். கேரளவுக்கு ஒத்துழைத்தது போல தயுவு கூர்ந்து ஒத்துழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. 

தமிழக முதல்வரும், நானும் தலைமை அமைச்சர் மோடியை சந்தித்து நிவாரண நிதி உதவி கேட்க இருக்கிறோம். சரக்கு-சேவைவரி போன்ற வரிவிதிப்பினால் தற்போது இங்கு போதிய நிதி இல்லை. பெட்டிச் சாவி அவர்களிடம்தான் உள்ளது. அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கி கூறினார்.
 
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி மேலூர் பகுதியில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை அளித்த பேட்டி: 
தமிழகத்தில் கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நிவாரண பணிகள் மேற்கொள்ள சென்றால், அவர்களுடன் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். 1 லட்சத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தமிழக மின்வாரிய துறையினர்களுடன், கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து வந்திருக்கும் மின் ஊழியர்களும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அனைவரும் ஒன்று சேர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு பணிகள் செய்ய விடாமல் தடுப்பது தவறு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.