Show all

தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற ரகசிய வீடியோ.

யூடியூப் தளத்தில் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பீகார் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தமது பதவியை ராஜினாமா செய்துளளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா பதவி வகித்து வந்தார்.

இவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற ரகசிய வீடியோ நேற்று யூடியூப் இணையதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் அதிபருக்கு உதவுவதாக அமைச்சர் குஷ்வாகா அந்த வீடியோவில் பேசியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அவர், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கதில் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது மானநஷ்ட  வழக்கு தொடர்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து குஷ்வாகாவை ராஜினாமா செய்யும்படி முதல்-மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இதனால் குஷ்வாகா நேற்று இரவு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பீகார் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ரா தொகுதியின் வேட்பாளராக குஷ்வாஹாவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்திருந்தது. தற்போது அவர் மீது எழுந்துள்ள லஞ்சப்புகாரை அடுத்து அவருக்குப் பதிலாக மற்றொரு வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.