Show all

அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயகாந்தின் மூத்த மகனுக்கு திருமணம்!

அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் முன்னணி கதைத்தலைவர்களில் ஒருவராக வலம் வந்த விஜயகாந்த், முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது உடல் நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, அரசியல் பொதுக் கூட்டம், தேர்தல் கருத்துப்பரப்புதல் என்று அவ்வபோது மக்களை சந்தித்து வரும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் அப்பாவின் ஒரு துறையான திரைத்துறையில் களம் இறங்கியிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன் அப்பாவின் மற்றொரு துறையான அரசியலில் சாதிக்க வேண்டுமே என்ற கனவில் இருக்கிறார்.

விஜயபிரபாகரன், அரசியல் மட்டுமன்றி பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரின், பி.வி.சிந்து இடம்பெற்றுள்ள சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், விஜய பிரபாகரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகள் கோவையை சேர்ந்த பெண்ணாம். மணமகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,359.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.