Show all

காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக காத்துக்கொண்டிருப்பதாக நவாஸ்ஷெரீப்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் அரசு நேற்று முன் தினம் தேர்தல் நடத்தியது. இந்தத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நவாஸ் ஷெரிப்பின் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். லண்டனில் இருதய அறுவை சிகிச்சை முடித்த பின்னர் கலந்து கொண்ட முதல் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரிப், தேவையற்ற சர்ச்சை கருத்துக்களைப் பேசியுள்ளார். நவாஸ் ஷெரீப் கூறுகையில், ‘காஷ்மீர் சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நாம் மறந்துவிட கூடாது. காஷ்மீருக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். காஷ்மீர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். காஷ்மீர் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம். காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.