Show all

கபாலி படம் எப்படியிருக்கு

கபாலி படம் பார்த்த பலரும் சொல்வது மொத்தத்தில் படம் அருமையாக இருக்கிறது. இரண்டு இடங்களில்தான் சற்று ஸ்லோவாக உள்ளது. அதை சரி செய்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இன்று வெளியான கபாலியைப் பார்க்க ஆண் ரசிகர்களைப் போலவே பெண் ரசிகைகளும் பெரும் திரளாக வந்ததைப் பல தியேட்டர்களில் காண முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆண்களைப் போலவே கபாலி டி சர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு பெண் ரசிகைகள் உற்சாகமாக வந்ததைப் பார்த்தபோது, பரம்பரை ரஜினி ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர். வரலாறு காணாத அளவில் பெண்கள் கூட்டம் கூடியிருந்தது ஒரு பக்கம் என்றால் இதுவரை இல்லாத அளவுக்கு கபாலிக்கு ரசிகர்கள் கூட்டம் ஒட்டுமொத்த அளவில் அதிகம்தான். படத்தைப் பார்த்து முடித்து விட்டு வெளியில் வந்த பெரும்பாலான ரசிகர்களுக்கும் படம் பிடித்துள்ளது. திருப்தியாகவே செல்கிறார்கள். அதேசமயம் 2 இடங்களில் படம் ஸ்லோவாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அதை சரி செய்தால் படம் இன்னும் பட்டையைக் கிளப்பும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. படத்தில் பலரையும் கவர்ந்திருப்பது ரஜினி உள்ளிட்டோரின் நடிப்பும், அட்டகாசமான வசனங்களும். இதுவரை தமிழ் திரைப்படத்தில் இவ்வளவு துணிச்சலான வசனம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு கூர் தீட்டப்பட்ட வசனங்கள் அனலைக் கக்குகின்றனவாம். பிற்பாதியில் துப்பாக்கிச் சண்டை அதிகம்தான். டப்பு டுப்பு என்று சுட்டுத் தள்ளுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் ரசிகர்கள் அந்தச் சண்டைகளும் நியாயப்படுத்தும் வகையிலேயே உள்ளதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் கபாலி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.