Show all

படம் வெளியிட யாராவது கிடைத்தால் உடனே வெளியீடு.

காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்தப் படமான குற்றமே தண்டனை இன்று மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதுதவிர மேலும் பல படவிழாக்களில் திரையிடத் தயாராக உள்ளது.

அடுத்ததாக கேரளாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் குற்றமே தண்டனை திரையிடப்படுகிறது. ரோட்டர்டாம் போன்ற பல படவிழாக்களிடம் அனுமதி கேட்டுள்ளோம். பதிலுக்குக் காத்திருக்கிறோம் என இயக்குநர் மணிகண்டன் கூறியுள்ளார்.

காக்கா முட்டை போல இந்தப் படமும் பட விழாக்களில் கலந்துகொண்டு பெயர் பெற்றபிறகு தமிழ்நாட்டில் வெளியிடுவது மாதிரியான திட்டத்தில் இல்லை என்கிறார் மணிகண்டன். படம் வெளியிட யாராவது கிடைத்தால் உடனே ரிலீஸ் செய்துவிடுவோம் என்கிறார். குற்றமே தண்டனை படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.