Show all

பா.ஜ.க.வின் விளம்பரங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை.

பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.

ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இரண்டு விளம்பரங்களுக்கும் தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் பா.ஜ.க.வின்  விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூகா கூறுகையில், பா.ஜ.க.வின் விளம்பரம் குறித்து நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தோம். எங்களது புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து விளம்பரத்தை தடை செய்திருப்பது பீகார் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வெற்றியும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.