Show all

2016.தேர்தலில் மாற்றம் வருவது உறுதி பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும். பாமக நிறுவனர் ராமதாஸ்;;;:

அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் அரிசி, பருப்பு, நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. சாமானிய மக்களின் சம்பளம் உயரவில்லை. விலைவாசியோ விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. விவசாய உற்பத்தி மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு நேர்மையான ஒரு அரசியல் கட்சி தேவை. ஊழல் இல்லாத ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

சமூக ஊடகங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த புதிய வசதி மூலம் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது. அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்த இது கைகொடுக்கும் என்று நம்புகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து இணையலாம். தி.மு.க.- அ.தி.மு.க. தவிர எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். வரும் தேர்தலில் மாற்றம் வருவது உறுதி பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.