Show all

நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

 

உத்தரபிரதேச மாநிலம், தாத்ரியில் உள்ள பிசோதா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28-ந் தேதி புகுந்த ஒரு கும்பல், அவரை அடித்துக்கொன்று விட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று நடுவண் அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல், தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை நடுவண் அரசிடம் திருப்பி கொடுத்தார். நாட்டில் வெறுப்புணர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கொடூரமான ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதி காப்பதற்கு எதிராகவும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை நயன்தாரா ஷேகல் திருப்பி கொடுத்து உள்ளார். ‘ரிச் லைக் அஸ்(1985)’ என்ற ஆங்கில நாவலுக்கு கடந்த 1986ம் ஆண்டு நயன்தாரா ஷேகலுக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.