Show all

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடை திறக்கவில்லை. இதனால் பக்தர்கள் அம்மனை வணங்க முடியாமல் கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்தவர் சுந்தரராஜன் அகவை 57. இவர் கோயிலில் இரவு நேர காவலராக பணியில் இருந்தார். இரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உயிர் பிரிந்தது. 

இதனைத் தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் 5.30க்கு திறக்கப்பட வேண்டிய கோயில் நடை திறக்கவில்லை. கோயிலைத் தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது. பரிகார பூசை முடிந்த பின்னர் கோயில் நடை திறக்கலாம் என கூறப்படுகிறது. 

பொங்கல் விழா நேரம் என்பதாலும், ஐயப்பன் பக்தர்கள் அதிகம் கோயிலுக்கு வரும் தருணம் என்பதாலும், மக்கள் கூடடம் நேரம் ஆக ஆக கூடிக் கொண்டே வருகிறது. பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.