Show all

சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றம்

சென்னை நுங்கம்பாத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த ஜீன் மாதம் நுங்கம்பாக்கத்தில் தொடர்வண்டி நிலையத்தில், கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கொளஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக, இனி வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, அரசு சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை காவல் துணை ஆணையரின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். சுவாதி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் கோபிநாத் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.