Show all

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ வெளியீட்டு நாள் அறிவிப்பு

சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரித்துள்ளார்.

அம்மா கணக்கு என்கிற இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடித்துள்ளார்கள்.  இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் உருவாகியுள்ளது. தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அம்மா கணக்கு, ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.