Show all

முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது

முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் எஸ்ஏஆர் கிலானி, தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவிற்கு ஆதரவான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. நேற்று இரவு கிலானி கைது செய்யப்பட்டு உள்ளார், இதனையடுத்து பாராளுமன்றத்தெரு காவல்துறையினர் விசாரணை நடத்திஉள்ளனர்.

 

பிப்ரவரி 10-ம் தேதி, செய்தியாளர்கள் சந்திப்பின் போதைய ஊடகங்களின் காணெளிப் பதிவைக் கொண்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மூத்த காவல்துறை  அதிகாரி கூறி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிஉள்ளனர்.

 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9-ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

 

மிகவும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குமார் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறிஉள்ளார். ஆதராம் எதுவும் இல்லாமல் மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளன. ஆனால் டெல்லி காவல்துறையினர் அது தவறானது என்று கூறிஉள்ளனர்.

 

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.